தலைமறைவாக உள்ள ஶ்ரீகஜன் விரைவில் கைதாவார் – பொலிஸ்மா அதிபர்

Monday, July 31st, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருடன் சம்பந்தப்பட்டுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகயன் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள அவரை விரைவில் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
யாழிற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருடனான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவருடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் தனது பதவியில் இருக்கின்றீரா? ஆவர் மீது சட்டநடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆதற்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார். தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருவதுடன், பொலிஸ் சேவையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் எந்த சந்தர்ப்பத்திலும்  சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. தப்பிக்கவும் விடமாட்டோம் என்றார்.

Related posts: