தலைமன்னாரில் ரஸ்யா நாட்டு பிஜை கைது – “கொரோனா” தொற்று சந்தேகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்படுத்தல்!

Tuesday, August 11th, 2020

காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தலைமன்னார் பகுதியில் தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கடற்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் பதில் நீதிவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்த ரவிட்டார்.

மேலும் கைதானவருக்கு “கொரோனா” தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருக்கான சீ.பி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் மேலதிகார நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது - நெடுஞ...
சீரற்ற காலநிலை - யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை - பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!