தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து – 20 இக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, March 16th, 2021

தலைமன்னார் – பியர் பகுதியில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: