தலைக் கவச தடையின் இடைக்காலத் தடை மேலும் நீடிப்பு!

Thursday, November 17th, 2016

தலைக்கவச தடைக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(17) தீர்ப்பளித்துள்ளது.

முகமூடி தலைக்கவசம் அணிவதைத் தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிராக பல சங்கங்கள் நீதிமன்றம் சென்றனர். இதன்போது, இச்சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறித்த இந்த இடைக்காலத் தடையையே மீண்டும் நீடித்து தீர்ப்பளித்துள்ளது.இந்த வகை  தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

fulface-helmat

Related posts: