தலைக்கவசம் இன்றி மாணவரை ஏற்றிச் செல்வோருக்குத் தண்டம்!

Thursday, February 14th, 2019

தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை உந்துருளிகளில் ஏற்றி வந்தவர்களுக்குப் பொலிஸாரால் தண்டமாக ஆயிரத்து 100 ரூபா வீதம் அறவிடப்பட்டது.

கடந்த இரு நாள்களாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்பாக நிற்கும் சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் இவ்வாறு தண்டம் விதித்து வருகின்றனர். தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளிகளில் ஏற்றிவந்த 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்பவ இடத்தண்டம் விதித்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பாடசாலை மாணவர்களுக்குத் தலைக்கவசம் அணியாமலேயே பெற்றோர் உறவினர்கள் பாடசாலைகளுக்கு ஏற்றி இறக்கி வருகின்றனர்.

விபத்து எதிர்பார்த்து வருவதல்ல. உந்துருளியில் பயணிக்கும் அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் இன்றி உந்துருளியில் பயணிக்கும் வேளையில் திடீர் விபத்துக்களால் பல மாணவர்கள் காயமடைந்து வருகின்றனர்.

உந்துருளியில் பயணிப்பவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தாதவகையில் தலைக்கவசம் அணியவேண்டுமென்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related posts:

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாத...
வழமைக்கு திரும்பியது சமையல் எரிவாயு விநியோகம் - 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் - அரசாங்கம் உறுதியளிப்பு!