தலசீமியா நோய்க் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டம்!

Tuesday, July 10th, 2018

தலசீமியா நோய் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டமொன்றை சுகாதார அமைச்சின் தலசீமியா நோய்த் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
2019 முதல் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்பு மச்சை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
முழு வசதிகளுடன் கூடிய 8 மாடிகளைக் கொண்ட என்பு மச்சை சத்திர சிகிச்சை வைத்தியசாலையொன்று 8 கோடி ரூபா செலவில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த வைத்தியசாலை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related posts: