தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் கடந்த 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றமை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அத்துடன் நாடு சாதாரண நிலைமையை அடையும் வரையில் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து திடமான தினம் எதனையும் குறிப்பிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இடைக்கால அறிக்கை புதிய அரசமைப்பு அல்ல - பிரதமர் ரணில்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயம்!
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பச்சை அனகொண்டாக்கள்!
|
|