தற்போதைய நிலைமைகளை எடுத்துரைக்க இன்று 8.30 இக்கு மக்களிடம் வருகின்றார் ஜனாதிபதி !

Friday, June 25th, 2021

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியின் உண்மை நிலை, மற்றும் அதிலிருந்து நாட்டினை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கவுள்ள செயற்திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு இன்றையதினம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மேற்கொள்ளவுள்ளார்.

இது குறித்து அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில் எமது பிராந்தியத்தில் நிலவும் பூகோள அரசியற் சிக்கல் நிலை மற்றும் உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவல் நிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும் குறித்த உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரச் செழிப்பை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது  ஜனாதிபதி விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று 25 ஆம் திகதி, இரவு 8.30 மணிக்கு, நாட்டின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாகவும் செவிமடுக்க முடியும் என்றும் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: