தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழுவில் முன்னிலையான மத்திய வங்கி அதிகாரிகள் !

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், இன்றைய தினம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை வங்கி அதிகாரிகளும், இன்று முற்பகல் 10 மணிக்கு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
இலங்கை வங்கி தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|