தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு விசாரணைக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்..
இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சர்வதேசத்தின் உதவிகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்- ரவிநாத் ஆரியசிங்க!
புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பு இவ்வருடம் நடக்கும் மகிந்தானந்த அழுத்கமகே தகவல்!
இலங்கையின் பணவீக்கம் மீண்டும் வீழ்ச்சி!
|
|
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து - இந்திய மத்திய கப்பல் போக்குவரத...
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களில் ஒப்படைப்பு; தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கு...