தற்போதைய சூழலில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் தற்போது மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் பொறுமையாக இருப்பது மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நன்மைகளைப் பெற உதவும் எனவும் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர்.ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஒக்டோபரில் உருவான கொரோனா அலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000 தாண்டவிலலை. சமீபத்திய அலை பாரிய தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு வழிவகுத்தது. அத்துடன் இது தற்போது ஆயிரத்து 700 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சு நாட்டை மீண்டும் திறந்து மூட விரும்பவில்லை, முடிவெடுப்பதில் கடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், நாட்டில் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.000
Related posts:
|
|