தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் – பிரதமர் கவலை!

தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் பல பிரச்சினைகளை ஏற்படுத்திய அதேவேளை, அரசாங்கம் வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமம் அபிவிருத்தியடைய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வீதி வலையமைப்புக்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய காலநிலையில் விரைவான அபிவிருத்தியை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தி படிப்படியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில்!
எமது அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோ...
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம் - அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக...
|
|