தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் உள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020

நத்தார் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கோ இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ள அவர் தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது எல்லாம் மக்களின் கைகளில் உள்ளது, அடுத்த ஏழு நாட்கள் அவகாசம். அதில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன் கொழும்பில் தற்போதுள்ள COVID-19 நிலைமை குறித்து கூறுகையில், சில பகுதிகள் கடுமையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன, தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள் இந்த வாரம் விடுவிக்கப்பட்டன. அனைத்து முக்கிய கொத்தணிகளையும் கட்டுப்படுத்த முடிந்தது.

அதிகமான கொத்தணிகள் உருவாகாமல் தடுக்க அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பராமரிக்க பொது உதவியை அவர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: