தற்கொலை தாக்குதல்களை கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு!

Wednesday, May 1st, 2019

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு ஏப்ரல் 22ஆம் திகதி முதல் தனதுசெயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இவ் விசேட விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்கே.மலல்கொட செயற்படுவதோடு, அதன் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொலிஸ்மாஅதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னஆகியோர் செயற்படுகின்றனர்.

குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரையில் பல உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிபெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரும் அவர்களுள் அடங்குகின்றனர்.

மேலும் பல நபர்களின் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, இது தொடர்பிலானதமது கருத்துக்களையும் தகவல்களையும் விசேட விசாரணை ஆணைக்குழுவிற்குதெரிவிக்குமாறு பிரபல செய்திப் பத்திரிகைகள் பலவற்றில் ஏப்ரல் 25ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டஅறிவித்தலின் ஊடாக பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல்களை தெரிவிப்பதற்கு விருப்பமற்றவர்கள் எழுத்து மூலமாக குறித்ததகவல்களை விசேட விசாரணை ஆணைக்குழுவின் செயலாளருக்கு

த.பெ.இல. 2306,கொழும்பு –  01 என்ற முகவரிக்கோ

அல்லதுதொலைநகல் இல. 011 2100446 ஊடாகவோ

அல்லது presinq@eastsun.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோஅனுப்பி வைக்குமாறு விசேட விசாரணை ஆணைக்குழு தயவுடன் கேட்டுக்கொள்கின்றது.

Related posts: