தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, April 27th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விடவும் 2017 ஆம் ஆண்டில் 124 பேரால் அதிகரித்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையை விடவும் 2017 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 578 பேர் சேர்க்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டில் 702 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேநேரம் 2017 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 702 பேரில் 123 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற புள்ளிவிவரமும் கூறுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2013 இல் 714 பேரும், 2014 இல் 640 பேரும் 2015 இல் 588 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: