தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு தீர்வு – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் அறிவிப்பு!

Tuesday, November 1st, 2022

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு விரைவில் நிரந்தர சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்..

தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்குரிய காலம் அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை நிரந்தர சாரதி அனுமதி பத்திரம் கிடைக்கவில்லை என சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற அனைவருக்கும் நிரந்தர அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்

இதுவரை ஆறு இலட்சம் சாரதிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்பொழுது புதிதாக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் சாரதிகளுக்கு உரிய திகதியில் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாரதி அனுமதி அட்டைகள் அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: