தற்காலிகமாக சோளப் பயிர்ச் செய்கையை நிறுத்த உத்தரவு!

Tuesday, January 29th, 2019

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளான சுமார் ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறும் விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: