தற்காலிகமாக கைவிடப்பட்டது ரயில் சாரதிகள் போராட்டம் !

Wednesday, January 18th, 2017

போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு எட்டப்பட்ட தன் காரணமாக வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் சாரதிகள் நடத்த இருந்த பொராட்டமே தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

லோகோமோடிவ் ஒபரேடர் இன்ஜினியர் எனப்படும் ரயில் சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் குதிக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் அமைச்சர் இந்த பிரச்சினை தொடர்பில் பேச தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் பின்போடப்பட்டுள்ளது.

பிரதான ரயில் சங்கமான ரயில் சாரதிகள் சங்கம் வேலைநிறுத்தத்தில் குதித்தால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்படும் நிலை ஏற்பாட்டிருக்கமென தெரிவிக்கப்படுகிறது

coltrain-delay175622490_5160410_17012017_MFF_CMY

Related posts: