தரம் 5 மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 23rd, 2021

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பாடசாலைகளில் சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலை வகுப்புகளின் எண்ணிக்கையையோ அல்லது ஒரு வகுப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: