தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணி – இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!
Thursday, August 17th, 2023தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைபேசி செயலியான டீ.ஓ.ஈ மூலமும் இணையவழி விண்ணப்பங்களை சமர்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். மக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்!
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரண...
|
|
மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற யுவதியை மோதிவிட்டுத் தப்பியோட்டம...
இராணுவத் தளபதி - தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்தி...
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...