தரம் ஒன்று மாணவர் சேர்ப்பு; இன்றுடன் நிறைவடைகிறது கால எல்லை -கல்வி அமைச்சு!

அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என்ற ரீதியில் மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியல் பழிவாங்கல்கள் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது - சாரதிகளுக்கு பொலிஸ...
மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின...
|
|