தரம் ஒன்று மாணவர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: ரோயல் கல்லூரியில் 07 பேர் இடைநிறுத்தம்!

Saturday, January 28th, 2017

இவ்வாண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கொழும்பு ரோயல் கல்லூரியில் 07 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய விஷேட விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் மூவர்களான, கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர், துணை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும், மேன்முறையீட்டு குழுவிலுள்ள 04 அதிகாரிகளான தர்மாலோக வித்தியாலயத்தின் அதிபர், மிலாகிரிய புனித பாவுலு பாலிகா வித்தியாலயத்தின் உதவி அதிபர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 07 பேரினது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Royal-College

Related posts:


படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
பல்கலை. இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் 22 இல் ஆரம்பம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு - சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு ...