தரம் ஒன்று மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு!

அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்குரிய இறுதி பெயர் பட்டியல் தற்போது பாடசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான தேசிய வைபவம் கொழும்பு இசிப்பத்தான கல்லூரியில் அடுத்த மாதம் 15ம் திகதி இடம்பெறும். இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் . அடுத்த மாதம் 15ம் திகதி தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கு தேவையான ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
தரம் ஒன்றில் ஒரு வகுப்புக்கு 38 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படைவீரர்களின் ஐந்து பிள்ளைகளை ஒரு வகுப்பிற்கு சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பட்டியலை பாதுகாப்பு பிரிவு கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளது. இவை மீண்டும் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் கூறினார்.
Related posts:
|
|