தரம் ஒன்றுக்கான கல்வி நடவடிக்கைகள் 17 ஆம் திகதி ஆரம்பம்!

Thursday, January 3rd, 2019

அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17 ஆம் திகதி மேற்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு எதுவித அழுத்தம் கொடுக்காமல் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்படுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தை இடைத் தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தச் சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: