தரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்!

Saturday, October 27th, 2018

தரம் 05 புலமைபரீட்சைக்குதோற்றி 140 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்கள் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் 2019ம் ஆண்டுஆறாம் ஆண்டுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் போது அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படிபுள்ளிகளுக்குஅமையசகலமாணவர்களுக்கும் ஜேசி.சி.சிகெயர் அமைப்பினால் வழங்கப்பட்டுவரும் ஊக்குவிப்புக்கான விபரம். 164 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கு 750 ரூபாவீதமும். 140 புள்ளிகளுக்கும் 163 புள்ளிகளுக்கும் அடையில் பெற்றமாணவர்களுக்கு 600 ரூபாவீதமும்  மாதாந்தம் தொடர்ச்சியாக 12 வரைவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மேலதிகவகுப்புக்கள்இ தொடர்மதிப்பீடுகள் நடத்தப்படும் பிரத்தியேக கணினிகற்கை ஆங்கில நெறிகற்கை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் உள் வாங்கப்படுவார்கள். பாடசாலையின் சகல விளையாட்டுக்கள் ஏனைய கழகசெயற்பாடுகளில் நேரடியாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியான மாணவர்கள் இதற்கான விண்ணப்பபடிவங்களை கல்லூரி அலுவலகத்தில் பெற்று அதனை பூரணபடுத்தி இடது மூலையில் தரம்-06 2019 எனகுறிப்பிட்டு அதிபர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மேற்படி அமைப்பின் பழைய மாணவர்கள் கேட்டுள்ளனர்.

Related posts: