தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவில்லை – சுகாதார அமைச்சு!

Tuesday, June 25th, 2019

சுகாதார அமைச்சு எப்பொழுதும் தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ரி. சுதர்ஷன தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம், தரங்குறைந்த மருந்து வகைகளை இறக்குமதி செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் அமைப்பின் தலைவர் வைத்தியர் றுக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வழிகாட்டலில் நாட்டின் சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள பாரிய பணிகள் முக்கியமானவை என்று அரசாங்கத்தின் டுபதிவுடு வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மஹிந்த லியனகே தெரிவித்தார்.

புகையிலைக்கான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட நாடு உலகில் இலங்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: