தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி – வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022

காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால், அவற்றின் விலைகள் குறைந்துள்ளதாகவும்கறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது..

மேலும் மொத்தமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: