தம்புள்ளையில் கோர விபத்து – சிறுமி பரிதாபமாக பலி !

தம்புள்ளை மாத்தளை ஏ – 9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுமார் 50 பயணிகள் குறித்த பேருந்துகளில் இருந்துள்ள நிலையில் இதில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த நபர்கள் தற்போதைய நிலையில் நாவுல, தம்புள்ள மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் உள்ள 7 பேர் மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தம்புள்ளை, விகாரை சந்தி பிரதேசத்தில் இருந்து சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தொன்றும் மற்றும் கண்டியில் இருந்து கந்துருவெல மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தொன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
|
|