தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச சபை தவிசாளருடன் சந்திப்பு!

தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு குறித்த பிரதேச சபை தவிசாளர் சுபியான் அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தலைமையிலான விஷேட குழுவினர் சென்று சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது திருமலை தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பிரதேச சபை ஊடாக செய்யக்கூடிய செயற்றிட்டங்கள் தொடர்பாக இருதரப்பினரும் ஆராய்ந்துகொண்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இப்பணிகளை பிரதேச சபையுடன் இணைந்து முன்னெடுப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் பிரதிநிதி ஒருவரும் இதன்போது நியமிக்கப்பட்டார்.
இதன்போது கட்சியின் தம்பலகாமம் பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் நாதன், அலுவலகப் பொறுப்பாளர் தோழர் சங்கர் மற்றும் நிர்வாகத் தோழர்கள் சிலரும் உடனிருந்தனர்.
இதனிடையே கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தலைமையிலான குழுவினர் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகெளரி சிறீபதி அவர்களையும் சந்தித்து பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|