தம்பகாமம் கிராமத்தின்  இந்து இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, May 9th, 2018

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள தம்பகாமம் கிராமம் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேறியதன் பின்னர் ஈழ மக்ககள் ஜனநாயகக் கட்சியே இம்மக்களுக்கான தேவைகளை முன்னின்று பெற்றுக்கொடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு இளம் சமூகத்தினரின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்ம்படுத்தும் நோக்குல் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான  வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள தம்பகாமம் கிராமத்தின்  இந்து இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றைய இளைஞர் சமூகம் நேர்வளிப்ப்பாதையில் செல்வது அவசியமானதாக . இளைஞர்களை சீரழிக்கும் சக்திகளின் சதி வலைக்குள் சிக்குப்படாது நேரிய சிந்தனையோடு சமூகத்தின் எதிர்கால சிற்பிகளாக இளைஞர் சமூகம் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சித் தலைவரின் சிந்தனையும் அதுவாகவே .இருக்கின்றது.

விளையாட்டுத்துறையில் எமது பிரதேச மாணவர்கள் சாதனை வீரர்களாக உருவாகி வரவேண்டும். இதற்காக எமது கட்சி என்றும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் இந்நிகழ்விலே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைப்பள்ளி நிர்வாக செயலாளர் பொன்.கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts:

வடக்கில் அனைத்து வன்முறைகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் - வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் நெருக்கடிக்கு தீர்வு கிட்டாது - எஸ்.பி.திஸாந...
விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு - எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது என வலு...