தமிழ் மொழியில் சித்தி பெறாததால் காலியாகவுள்ள 5,536 வெற்றிடங்கள்!

Monday, February 24th, 2020

தமிழ் மொழியில் சித்தி பெறாததால் நாடளாவிய ரீதியில் 5,536 அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமலிருக்கும் விடயம் கோப்குழுவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கோப் குழு நடத்திய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 2019 பெப்ரவரி 20, முதல் 2019 நவம்பர் 7 வரையான காலப்பகுதி தொடர்பான 42 விசாரணைகளின் அவதானிப்பு, மற்றும் பரிந்துரைகளில் இந்த விவகாரமும் தெரிய வந்துள்ளது.

அதிபர்களின் சேவையில் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 5,536 ஆகும். தரம் I இல் 1,750 வெற்றிடங்கள், தரம் II இல் 1,868 வெற்றிடங்கள், மற்றும் தரம் III இல் 1,918 வெற்றிடங்கள் உள்ளன. சுற்றறிக்கை எண் 1/2014 இன் படி தமிழ் மொழி தேர்ச்சி பெறாதது அந்த வெற்றிடங்களை நிரப்ப தடையாக உள்ளது என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: