தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, February 4th, 2017

மத்தியில் ஆட்சி மாற்றமடைந்தாலும் அந்த ஆட்சியோடு அரசியல் பலத்தேடு கூட்டுச் சேர்ந்திருப்பவர்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாது தூங்கிக் கிடக்கின்றார்கள். ஆகவே தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழவேண்டும். அதனூடாகவே தமிழ் மக்களது அரசியல் தலைவிதி மாற்றி எழுதப்படும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு பகுதியில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் வடதேசத்தை வலுவான தேசமாக கட்டியெழுப்பும் பலம் கொண்ட வடக்கு மாகாணத்தை ஆற்றலற்றவர்களது கரங்களுக்கு தமிழ் மக்கள் கையளித்ததன் விளைவுகளால் இன்று வடக்கில் வாழும் அதிகமான மக்கள் அபிவிருத்திக்காகவும் தமது வாழ்வியல் தேவைகளுக்காகவும் பொது அமைப்புகளையும் மத்திய அரசையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வளம்மிக்க வடக்கின் மாகாணசபையை ஆற்றலும் மக்கள் மீது அக்கறையும் உள்ள எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கரங்களுக்கு கிடைத்திருந்தால் நிச்சயமாக முடிவுற்றுள்ள மூன்றாண்டு காலப்பகுதிக்குள் வெறும் பிரேரணைளை மட்டும்  நிறைவேற்றியிருக்க மாட்டோம். மாறாக சபையின் ஒவ்வொரு அமர்விலும் புதிய புதிய செயற்றிட்டங்களுக்கான அனுமதியை பெற்று வடபகுதியை வளமான தேசமாக உருவாக்கியிருப்போம்.

தமிழ் மக்களது தவறான தெரிவுகள்தான் அவர்களது இன்றைய அவல வாழ்வுக்கு காரணமாகும். அரசியல் ரீதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்கள் பலமடையும்போதுதான் தமிழ் மக்களது உரிமைகளும் அவர்கள் இன்று எதிர்கொண்டுள்ள அவல வாழ்வும் வெற்றிகொள்ளப்படும் நாளும் உருவாக்கப்படும் என்றார்.

இச்சந்திப்பின் போபோது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) , கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர்  ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

image-0-02-06-167533e870a5b3ce9f1f97b58d5aadfc22293a215372396d846047e33d16a92c-V

Related posts: