தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிலையான தீர்வு – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023

தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உறுதியளித்துள்ளார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கின்றோம்.

அதேபோல் அவர்களும் ஜனாதிபதியின் தேசிய ரீதியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அப்போதுதான் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிரணி என இரு தரப்பினரும் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீர்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: