தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!

Sunday, August 25th, 2019

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் மிக பிராதான பிரச்சினைகளில் வேளைவாய்ப்பு முக்கிய இடத்தினை பெறுகின்றது. அந்த பிரச்சினை தமது ஆட்சி காலத்தில் தீர்க்கப்படும்.

தன்னுடைய கீழ் உள்ள அரசு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும்.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில அரசியல் வாதிகள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்த அவர், அவ்வாறு செய்யவேண்டாம்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குழு நியமனம்!
வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு - அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருத்தப்பட்ட பாதீட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை - அமைச்சரவை பேச்சாளர் அமைச...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்கள்...