தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டி  டக்ளஸ் தேவானந்தா – முல்லைத்தீவு மக்கள் புகழாரம்!

Monday, September 12th, 2016

 

நீண்டகாலமாக தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும்  பெரும்பணிகளையும் நாம் தவறான வழிநடத்தல் காரணமாக சீர்தூக்கிப்பார்க்கத் தவறிவிட்டோம். இதனால் தான் நாம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரவலத்தை சந்திக்க நேர்ந்தது என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் (12) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

DSC05361 - Copy

காலங்காலமாக உணர்ச்சிப் பேச்சுக்களாலும் உசுப்பேற்றல்களாலும் எமது மூத்த அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டு வந்தோம். இதன்பின்னரான காலத்தில் ஆயுதப் போராட்டத்தினூடாகவே மக்களுக்கான விடுதலையை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் எதிரிக்கு எதிராக களமுனைகளில் சமராடியிருந்தோம். இதில் நாம் சிலவற்றில் வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் அதனூடாக எமது மக்களுக்கானதொரு நிரந்தர தீர்வை எற்படுத்த முடியவில்லை.

மாறாக யுத்தத்தில் எமது அன்பான உறவுகளை இழந்திருந்ததுடன் சொத்துக்களையும் சுகங்களையும் இழந்ததுடன் நிர்க்கதியான நிலையில் உடலில் விழுப்புண்களுடனும் அங்கவீனர்களாகவும் சமூகத்தில் வாழ்ந்துவருகின்றோம்.

DSC05356 - Copy - Copy

தேர்தல் காலங்களில் எம்மிடம் வரும் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் எம் மத்தியில் மாஜாயால பேச்சுக்களையும் வீராப்பு பேச்சுக்களையும் பேசி எமது உணர்வுகளை தட்டி எழுப்பி தமக்கான தேர்தல் வெற்றிகளை இலகுவாகப்பெற்றிருந்தனர். துன்பத்திலிருந்து எம்மை மீட்கும் தூதுவர்களாகவவே அவர்களை நம்பியிருந்தது மட்டமன்றி அவர்களுக்கான வாக்குப்பலத்தை சிதறடிக்காமல் அவர்களுக்கே நாம் வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றதன் பின்னர் எமக்கு கூறிய வாக்குறுதிகளில் இதுவரையில் ஒன்றையேனும் கேட்டதும் இல்லை அதை இதுவரையிலும் செய்துதந்ததும் இல்லை. அதன் காரணமாகவே நாம் தற்போது தோற்றுப்போனவர்களாக சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

DSC05347

இனியும் அவர்களை நம்பி நாங்கள் ஏமாற தயாராக இல்லை என்பதை முழு மனதுடன் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

அந்தவகையில்தான் தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் தன்னலமற்ற தலைவராகவும் விளங்கும் உங்களை  நாம் இன்று பார்க்கின்றோம்.

வரலாற்றில் தமிழர்கள் அன்றுதொட்டு தோற்றதாகவோ அடிபணிந்ததாகவோ இல்லாத போதிலும் இன்று எமது மக்கள் நாம் தோற்றுப்போனவர்கள் என்ற மனோநிலையிலேயே வாழ்ந்துவருகின்றார்கள். ஆனால் தோற்றுப்போனவர்கள் நாமல்ல. எம்மை வழிநடத்திய தவறான தமிழ் தலைவர்களே அதற்கு முழுமையாக பொறுப்பெடுத்துக்கொள்ளவேண்டும்.

DSC05333

இந்நிலையில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும்  பெரும்பணிகளையும் ஒருபோதும் மறந்தவிட முடியாது. அவற்றுக்கான சான்றுகள் வரலாற்றில் தடம்பதித்துள்ளன. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டதன் தருணங்களை சீர்தூக்கிப்பார்க்கத் தவறிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தனர். அத்துடன் எதிர்காலங்களில் ஒன்றிணைந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கி அதனூடாக எமது மாவட்டத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க தயாராக உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: