தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் வலியுறுத்து!
Tuesday, December 12th, 2023வடக்கு கிழக்கு மக்களின் தேவை என்ன என்பதை ஜே.வி.பி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (12.11.2023) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிறீ ரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில் –
தமிழரின் அரசியல் தீர்வுக்காக ஜே.வி.பி உட்பட தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளிடம் 13 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவை கோரி இருக்கின்றோம்.
இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் நேசமாக கேட்கின்றோம்.
மாறி மாறி வருகின்ற ஆட்சிகளில் தென்னிலங்கையில் எதிர்ப்புகளும் காட்டப்படுகின்றன. தற்போது அரசு 13 ஆவது திருத்தம் தொடர்பாபக அவ்வப்போது தனது நிலைப்பாட்டை கூறிவருகின்றது.
எனவே இதில் ஜே.பி.வியின் நிலைப்பபடு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|