தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் 13வது திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இலங்கை இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளது என்றும் இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் ஆர்வம் குறித்து இந்திய தலைவரிடம் தெரிவிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா தனது கடமையாகக் கருதுகிறது என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|