தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளை அரங்கேற்றிய மட்டக்களப்பு இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

Sunday, April 29th, 2018

புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் இளைஞர் சங்கத்தால் தமிழரது கலை கலாசாரத்தை முன்னிறுத்திய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தமிழ் இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட குறித்த நிகழ்வு கடந்த 28.04.2018 சனிக்கிழமை கல்லடிப் பாலத்திற்கருகில் உள்ள மாநகர சிறுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வின்போது  தமிழ் மக்களது பாரம்மபரிய கலை நிகழ்வுகளான மாட்டு வண்டி சவாரி, மயில் நடனம், உறியடி, கபடி, குறவஞ்சி போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நவீனம் என்ற பெயரில் தமிழரது பாரம்பரியங்களை இன்றைய தமிழ் சமூகம் மறந்துவரும் நிலையில் மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் எமது இனத்தின் பாரம்பரியங்கள் அழிவுற்றுவிடாது தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து வருகின்றனர் என்று குறித்த நிகழ்வு தொடர்பில் மட்டு நகர் புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: