தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கொலைவெறித் தாக்குதல்- ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் படுகாயம் – வைத்தியசாலையில் அனுமதி!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பளை பகுதி வேட்பாளர் கஜன் முத்துக்குமார் என்பவரது காடையர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு பளைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான குறித்த நபர் தனது பணிகளை முடித்துவிட்டு தனது மடிக்கணனி திருதுவதற்காக கடைக்குச் சென்ற சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பளைப் பகுதி வேட்பாளரான கஜன் முத்துக்குமார் என்பவர் தனது காடையர் கூட்டத்தைக்கொண்டு பொல்லுகளால் அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த தாக்கதலில் படுகாயமடைந்து குறித்த ஆதரவாளர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|