தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. – வவுனியா மக்கள் நன்றி தெரிவிப்பு!

Monday, January 7th, 2019

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக கடும் சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட வவுனியா ஸ்ரீநகர் கிராம முன்பள்ளிக் கட்டடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி சீரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் பிடிக்குள் இருந்த குறித்த முன்பள்ளி நீண்டகாலமாக எதுவிதமான சீரமைப்புகளோ அன்றி முன்னேற்றங்களோ காணாத நிலையில் கூரைகள் உடைந்தும் வேலிகள் அற்றும் பெரும் வளப்பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்தது.

இதனால் குறித்த முன்பள்ளியில் கற்கும் சிறார்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினரது கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து குறித்த முன்பள்ளியை சீரமைக்கும் நடவடிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் மேற்கொண்டனர்.

இதனை தடுக்க கடுமையாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தரப்பினர் முயன்றபோதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களது மக்கள் சேவை முன் அது எடுபடாது போனமையால் குறித்த முன்பள்ளி புதிய கூரைத்தகடுகள் போடப்பட்டு சுவர்களுக்கு வர்ணப் பூச்சு பூசப்பட்டு மீள் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் முன்பள்ளி அமைந்துள்ள பகுதி கொங்கிறீற் தூண்களால் வேலியிடப்பட்டு பாதுகாப்பான முறையில் முன்பள்ளி நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த முன்பள்ளியை சீரமைக்க சமூகநலன்விரும்பியான கந்தப்பிள்ளை திலீபன் உதவிகள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்பள்ளியை சீரமைத்துக் கொடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருக்கு குறித்த பிரதேச மக்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

6

4

5

Related posts: