தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்டம்!

Monday, October 9th, 2017

அனுராதபுரம் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு  எற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.

குறித்த ஊர்வலம் நடைபவனி ஊர்வலமாக வேம்படி சந்திவரை சென்று பின் அங்கிருந்து யாழ் பேருந்து நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வீதியின் போக்குவரத்துகள் சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.

அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களின் வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றியதைக் கண்டித்து, மீண்டும் வவுனியாவிற்கு மாற்ற வலியுறுத்தி 13 நாட்களையும் தாண்டி அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கின்ற ம. சுலக்ஷன், க. தர்சன், இ. திருவருள் ஆகிய மூன்றுபேரினதும் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என கோரி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: