தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியானது!

Sunday, October 8th, 2017

தகவலறியும் சட்டத்தன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு மெகசின், வெலிக்கடை, அனுராதபுரம், போகம்பர , நீர்கொழும்பு, மஹர, பொலன்னறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு..

மெகசின் – 79
வெலிக்கடை – 3
கொழும்பு ரிமாண்ட் – 3
அனுராதபுரம் – 20
தும்பர – 9
நீர்கொழும்பு – 5
மஹர – 4
பொலன்னறுவை – 1
மட்டக்களப்பு – 6
யாழ்ப்பாணம் – 1
மொனராகலை – 1

தகவலறியும் சட்டத்திற்கு அமைய நியூஸ்பெஸ்ட் பெற்றுக்கொண்டுள்ள பட்டியலில் 132 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை,அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளின் நியாயமான கோரிக்கை செவிமடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம், நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் இதுவரை கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் முன்னெடுப்’ப...
இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு த...
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...