தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசுவது சிறந்தது – மக்கள் விடுதலை முன்னணி!

Tuesday, September 3rd, 2019

தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசி இணக்கம் காணவே தாம் விரும்புவதாகவும் கூறினார்.

தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் பிரகாரம் விரைவாக வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபடும் என கூறிய அவர், தேசிய அரசியல் கொள்கையின் பிரகாரம் இந்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வேலைத்திட்டங்களின்போது பாகுபாடு இல்லாத அரசியல் நகர்வுகளையே தாம் முன்னெடுத்து வருவதாகவும், தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னர் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே ஆரோக்கியமானது என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

Related posts: