தமிழ்மொழியில் சட்டங்கள் : நீதி அமைச்சு நடவடிக்கை!
Monday, February 6th, 2017நீதித்துறையில் முக்கியமான சட்டங்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
சிவில் மற்றும் குற்றச் சட்ட விதிகளின் கீழ் உள்ள கட்டளைகள் போன்ற 100 விடயங்களுக்கு மேற்பட்ட ஆவணங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் நிதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸவால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டன.
இவ்வாறான மொழி பெயர்ப்பு இலங்கையில் இடம்பெற்றுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.
சட்டம் தொடர்பில் தமிழ்மொழியில் மதிப்பீடுகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
சமகால அரசாங்கம் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்மொழியில் அச்சிடப்படாத இவ்வாறான சட்ட விதிகள் தமிழ் மக்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்தும் மொழி பெயர்க்கப்படும் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதித்துறையில் உள்ள கட்டளைகள் மற்றும் சட்டங்கள் பெரும்பாலானவை ஆங்கிலமொழியில் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளன. இவை பொதுமக்களுக்கும், சட்டத்துறைக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துள்ளதென நீதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையிலேயே மொழி பெயர்ப்புக்கான திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையில் விசேட அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களும், திருத்தச் சட்டம் தொடர்பில் பணியாற்றியோர் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்
Related posts:
|
|