மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு – E.P.D.P யின் .யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் !

மத்திய அரசுடன் உறவை கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களால் அடை மழையால் பாதிக்கப்பட்டு தத்தளிக்கும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளைக் கூட மேற்கொள்ள முடியாதிருப்பது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோரால் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசுடன் இணக்க அரசியலை மேற்கொண்டு வந்த காலப்பகுதியில் எமது மக்கள் மழையால் பாதிக்கப்பட்டாலோ அன்றி வரட்சியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேறெந்த இடர்பாடுகளை சந்திக்க நேரிட்டாலோ அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகளையும் துரிதகதியில் மேற்கொண்டு மக்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுத்திருந்தார்.
ஆனால் நாட்டில் தற்போது அமைந்துள்ளதாக கூறப்படும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது நலன்களை முன்நிறுத்தியே அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்களே தவிர மக்களின் அபிலாஷைகளை மட்டுமல்ல அடிப்படை தேவைகளையும்கூடப் புறந்தள்ளிவருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களுடன் எதிர்கட்சி வரிசையிலிருந்து மத்திய அரசுக்கு முண்டுகொடுத்துவரும் இவ்வாறனவர்கள் தமிழ் மக்களுக்கு இதுவரை எத்தகைய நலன்களை பெற்றுக் கொடுத்துள்ளனர். எனவே இவர்கள் விடயத்தில் மக்கள் விழிப்பாக இருப்பதே காலத்தின் தேவையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|