தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் எந்தநேரமும் பேச நான் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பு!

தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
“தமிழ்க் கட்சிகளைப் பேச்சுக்கு வருமாறு நாடாளுமன்றத்தில் வைத்து நான் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளேன்.
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வந்தால் பேச்சை எந்நேரமும் ஆரம்பிக்க நான் தயாராகவுள்ளேன். எந்தப் பிரச்சினைகளுக்கும் பேச்சு மூலம் தீர்வு காண முடியும்.
நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பேன். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|