தமிழில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்!

Saturday, September 10th, 2016

குற்றச்செயல்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பில் அவசர அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வவுனியா மன்னார் மாவட்ட மக்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந் நிகழ்வு வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்ந நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்களுக்கு 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னார் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்.

இதேவேளை சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் சிலருக்கும் மேற்படி இலக்கத்திற்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ற தொலைபேசி சிம் அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், மத குருமார், வர்த்தக பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

image-110

image-118

image-116

Related posts: