தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, August 10th, 2020

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எனது முந்தைய ஆட்சியின் போது வடபகுதியில் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் பெருமளவு விடயங்களை செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம் துரிதப்படுத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இனம் கலாச்சார பின்னணிகளை கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம்,ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல் கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வை காண்பது குறித்து அவர் அந்த பேட்டியில் எதனையும் குறிப்பிடவில்லை.

Related posts: