தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Sunday, November 20th, 2016

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 07 வருடங்கள் கடந்துள்ள போதிலும்  இன்றுவரை எமது மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சரியானதொரு அரசியல் தலைமையை கடந்த காலத் தேர்தல்களில் தமிழ் மக்கள் தெரிவு செய்யாமையால் தான் இன்று எமது மக்கள் அரசியல் ஏதிலிகளாக வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர் மாட்டின் ஜெயா தெரிவித்துள்ளார்.

செங்கதிரோனின் தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பில் மாட்டின் ஜெயாவாகிய நான் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம்  அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் திசை வழிமாறிய நிலையில் எமது நாட்டில் கடந்த சில தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும்  இன்றுவரை எமது மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

15134384_1232518340120584_1023371457_n

நாட்டில் இடம்பெற்ற அழிவு யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் கடந்தகால அரசியல் தலைமைகள் தவறவிட்டு விட்டன. அதாவது  1987ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னர் 2000ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரால் வழங்கப்பட்ட தீர்வுத் திட்டம் போன்றவற்றைப் பெற்று சரியான முறையில் செயற்படுத்த கடந்தகால அரசியல் தலைமைகள் விரும்பியிருக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்  யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 07 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதி கடந்துள்ள போதிலும்  இன்றுவரை எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சரியானதொரு அரசியல் தலைமையை கடந்தகாலத் தேர்தல்களில் தெரிவு செய்யாமையால் இன்று எமது மக்கள் அரசியல் ஏதிலிகளாக வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து  அரசியல் ஏதிலிகளாக வாழும் சூழலுக்குள்ளிருந்து எமது மக்களை வெளிக்கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகவுள்ளதுடன்  மக்களை சரியான பாதையிலும் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் மக்கள் சரியாதொரு பாதையைத் தெரிவு செய்வதற்கான உந்துசக்தியாக தமிழ் பத்திரிகைகள் செயற்பட வேண்டும் என்ற நிலையில் பத்திரிகை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள தினக்குரல் பத்திரிகை புதிய பண்பாடு என்னும் தலைப்பில் பிரதி சனிக்கிழமைகளில் அரசியல் தொகுப்பை பிரசுரித்து வருகின்றது.

15175461_1232518486787236_1557878508_n

இது தமிழ் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன்  கடந்தகால  சமகால அரசியல் செயற்பாடுகளை மக்கள் விமர்சிக்குமளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. புதிய பண்பாடு அரசியல் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பில் மட்டக்களப்பு நகரிலிருந்து வெளியிடப்படும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான செங்கதிரின் ஆசிரியரும்  கலை இலக்கிய  அரசியல்  சமூக செயற்பாட்டாளருமான செங்கதிரோன் என்ற புனைபெயரில் அழைக்கப்படும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதி வெளியிட்டுவரும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்று வருகின்றன.

செங்கதிரோனின் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்படும் தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள் என்னும் இந்த நூல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுக் கொள்வதுடன் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ வேண்டும்.

நாட்டில் நிலவும் இன்றைய யதார்த்த சூழ்நிலையில்  கடந்தகால அனுபவங்களைக் கருத்திற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான சிறந்ததொரு தலைமையைத் தெரிவு செய்வதற்கு செங்கதிரோனின் ஆய்வுக் கட்டுரைகள் பாலமாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

இது இவ்வாறிருக்க  மாகாண சபைத் தெரிவுகள்  நாடாளுமன்றத் தெரிவுகள் போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் எமது மக்களை சந்தித்துஇ கடந்தகால யுத்த அழிவுகளை நினைவூட்டி உணர்ச்சிப் பேச்சுக்கள் மற்றும் உசுப்பேற்றல்களால் தமக்கான பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து வருபவர்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

15135435_1232518416787243_565155727_n

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்பது போன்று தேர்தல் காலங்களில் யதார்த்த சூழ்நிலையை விடுத்து  தனிநாடு பெற்றுத் தருகின்றோம். சமஷ்டி தீர்வைப் பெற்றுத் தருகின்றோம். தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகின்றோமென பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இத்தகைய வாக்குறுதியை வழங்கிய தலைமைகளே இன்று பதவிகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் வாக்குறுதிகளை மறந்து தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் துளியளவேனும் கவனம்செலுத்தாமல் மௌனிகளாக இருந்து வருகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வதற்கு அரசியல் சிந்தனையாளர்களின் பேனாக்கள் வித்திட வேண்டும்.

அதேவேளை சமகால அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப யதார்த்த அரசியல் வழிமுறைகளில் நின்று செயற்பட்டு வருபவர்கள் தொடர்பில் மக்களின் கவனம் திரும்ப வேண்டும். தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற மாயைக்குள் இருந்து வெளியேவந்து நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகளின் ஊடாக அரசியல் உரிமை வாழ்வாதாரம் அபிவிருத்தி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய தலைமையைத் தெரிவு செய்ய எமது மக்களை அணிதிரட்டுவதற்கு பலம் சேர்ப்பதற்காக யதார்த்தமான நடுநிலை சிந்தனையோட்டத்துடனான அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் பலம் சேர்க்கும் வகையில் வெளியிடப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இது இவ்வாறிருக்க தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமே தமிழர் வரலாற்றில் மாற்று அரசியல் என்ற தளத்தில் முதலில் விதையை விதைத்தவர்கள். மாற்று அரசியல் என்ற விருட்சத்தை வளர்த்துப் பாதுகாப்பதற்காக எமது அர்ப்பணிப்புகள் தியாகங்கள் மட்டுமன்றி எமது தோழர்களின் உயிர்களும் தியாகம் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறான சூழ்நிலைகள் எமக்கு வந்த போதிலும் மற்றவர்களைப் போல் அல்லாது தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை சரியான வழிமுறை நோக்கி நகர்த்திய பெருமையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமக்கே உரியது.

இன்று நல்லாட்சி அரசை தாமே கொண்டு வந்தோம் என்று ஆரம்பித்தவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளென பாராளுமன்றத்திற்குப் போனதாகக் கூறிக்கொள்பவர்கள் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் தமது குடும்பத்தினருக்கான ஆடம்பர வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனரே தவிர தமக்கு வாக்களித்த எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதனையும் செய்யவில்லை. இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இன்று இருக்கும் அதே புள்ளியில்தான் எமது பிரதேசத்தையும் மக்களையும் இவர்கள் வைத்திருப்பார்கள் என்பதற்கு தற்போது தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படாமலுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களே மிகப்பெரும் சான்றாகும். அன்று மாற்று அரசியல் என்ற பாதையை நாம் வகுத்த போது அதனைப் பிழை எனக் கூறியவர்கள் இன்று அதே பாதையினூடாகப் பயணித்துக் கொண்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

ஆகவே உணர்ச்சிப் பேச்சுக்கள் உசுப்பேற்றல்கள் போன்றவற்றால் ஏமாற்றப்பட்டு கடந்தகால அரசியல் தலைமைகளின் தெரிவுகளில் தொடர்ச்சியான தவறுகளையே விட்டுவந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும் எமது சமூகத்தின் நலன்நின்று இனிவரும் காலங்களில் சரியான தலைமைகளைத் தெரிவு செய்வதில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன்இ தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள் என்ற இந்த நூலைப் போன்று மேலும் பல நூல்களை வெளியிட எழுத்தாளர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்

Related posts:


புகைப்பிடித்தல் - மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும் - சுகாதார சேவைக...
மே 9 வன்முறை சம்பவம் - இதுவரை 1348 பேர் கைது - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் ...