தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் அக்கறை தொடர்வது அவசியம் – இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

கடந்தகாலங்களைப் போன்று தமிழ் மக்களுக்கான நலன்களில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோருக்கிடையே விசேட சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் 40 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல் முன்னகர்வுகள் மற்றும் தமிழ் மக்களுக்குரிய தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமே எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தும் என எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவின் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அதை ஏற்று இன்றுவரை வலியுறுத்வருகின்றார்.
அதுவே இன்று சாத்தியமாகியுள்ளது என்றும் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு திலீபன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் இந்தி அரசாங்கத்தினால் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இந்தியா சென்றிருந்தபோது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இந்தி அரசால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுகள், புகையிரத பாதை உள்ளிட்ட பல உதவித்திட்டங்களை தந்துதவியமைக்கு இந்திய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்ப்பினர் திலீபன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
அதேபோன்று அதேபோன்று தற்போதும் பலதரப்பட்ட தேவைகள் எமது மக்களிடம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய திலீபன் அவற்றையும் இந்திய அரசு தந்துதவுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|